தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு - மலையகத்திலும் பாதிப்பு(Video)
தபால் ஊழியர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் பணிபுரிய வேண்டும் என தாபல் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில், அந்த மூன்று நாட்களில் சனிக்கிழமையை உள்ளடக்குமாறு கோரி மலையகத்தில் அட்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் தபால் நிலைய ஊழியர்கள் இன்றும் (04.07.2022) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
எரிபொருள் உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக தபால் திணைக்களப் பணிகளை மட்டுப்படுத்த அந்த திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த வகையில், தபால் ஊழியர்கள் வாரத்தில் செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாத்திரம் பணியாற்ற வேண்டும் என தபால் திணைக்களம் அண்மையில் அறிவித்திருந்தது.
பணிப்புறக்கணிப்பு எதிர்வரும் 11ஆம் திகதி வரை தொடரும்
இந்த நிலையில், தமக்கு வழங்கப்பட்ட மூன்று நாட்களில் சனிக்கிழமையையும் உள்ளடக்குமாறு கோரியே மலையகத்தில் உள்ள தபால் அலுவலக ஊழியர்கள் தொடர்ந்தும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பணிப்புறக்கணிப்பு எதிர்வரும் 11ஆம் திகதி வரை தொடரும் என தபால் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த வேலைநிறுத்தம் காரணமாக மலையகத்திலும், தபால் சேவை மற்றும் அலுவலக
கடிதப் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியாத நிலையும், மக்கள் பரிவர்த்தனை செய்ய
முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.






சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
