தபால் திணைக்களத்தின் ஊழியர்களின் விடுமுறை உடனடியாக இரத்து
எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் இரத்துச்செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று (23ஆம் திகதி) முதல் நவம்பர் 14ஆம் திகதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அவசியமான பணிகளுக்காக விடுமுறை
எவ்வாறாயினும், ஏதேனும் சுகவீனம் அல்லது அவசியமான பணிகளுக்காக விடுமுறை எடுப்பது அவசியமானால், மாகாண பிரதி தபால் மா அதிபரின் ஒப்புதலுக்கு அமைய விடுமுறை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்தல் தொடர்பான பதிவு செய்யப்பட்ட தபால்மூல வாக்கு கையிருப்பு பொதிகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று இடம்பெறவுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

இந்தியா-பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்: உள்நாட்டில் 5-ஆம் தலைமுறை போர் விமான எஞ்சின்கள் தயாரிப்பு News Lankasri

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam
