கொழும்பு தாமரை கோபுரத்தில் உயிரிழந்த மாணவி: பெற்றோர் வெளியிட்ட தகவல்
தாமரை கோபுரத்தில் இருந்து குதித்து தவறான முடிவெடுத்து உயிரிழந்த பாடசாலை மாணவியின் மரணம் குறித்து பரப்பப்படும் பொய்யான தகவல் குறித்து அவரது பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
மாணவியின் மரணம் குறித்து வெளியான செய்திகளில் தாங்கள் இன்னும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில், மாணவியின் மரணம் தொடர்பில் பெற்றோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வீடியோ கேம்களில் ஈடுபடுவது, பெற்றோரின் அழுத்தம், துன்புறுத்தல் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவது என பல பொய்யான காரணங்களை மகள் மீது சுமத்தியுள்ளனர்.

மகளின் மரணம் குறித்து தவறான கருத்து
இதன்மூலம் மகளின் மரணம் குறித்து தவறான கருத்தை வெளிப்படுத்த முயற்சிப்பதாகவும் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடந்த ஜூலை 2ஆம் திகதி கொள்ளுப்பிட்டி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேல் மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர்களின் நெருங்கிய தோழி எனவும் தெரிவித்துள்ளனர்.
இவரின் நெருங்கிய நண்பியும், நண்பரும் உயிரிழந்த இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாது கடுமையான மன உளைச்சளுக்கு உள்ளாகியிருந்ததாகவும், அவரை மீட்டு சரியான பாதைக்கு கொண்டு வர நிபுணர்களின் உதவியைப் பெற்றதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மாணவி குணமடைந்து வரும் வேளையில் தனது பாடசாலையில் சில ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பரப்பிய பொய்யான வதந்திகளினால் பாதிக்கப்பட்டிருந்ததாக மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
 
 
சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கை
இந்த விவகாரத்தில் தங்கள் மகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும், மற்ற மாணவர்களை தங்கள் மகளிடம் இருந்து ஒதுக்கிவைக்குமாறும் சில பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இவ்வாறான பெற்றோர்களின் வதந்திகளாலும், அழுத்தங்களாலும் தனது மகள் மிகவும் வேதனையில் பொழுதை கழித்ததாகவும் இதன் காரணமாகவே அவரை வேறு பாடசாலைக்கு மாற்ற நினைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

எனினும், அவளின் மீதான அழுத்தங்கள் அவளால் தாங்க முடியாத நிலையை எட்டி,மரணத்தை ஏற்படுத்தியுள்ளதாக பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு ஐவரடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        