புதிய இந்திய அமைச்சர்களின் பொறுப்புக்கள் தொடர்பில் எதிர்ப்பார்க்கப்படும் தகவல்கள்
பிரதமர் மோடி தலைமையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடக்கும் நிலையில், இந்தக் கூட்டத்திற்குப் பிறகு யாருக்கு எந்த இலாகா என்பது குறித்த தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், பாஜக 240 சீட்களில் வென்ற நிலையில், என்டிஏ கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்துள்ளது.
இதையடுத்து நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நேற்று பதவியேற்றார். நேருவுக்குப் பிறகு ஒருவர் மூன்றாவது முறையாகப் பதவியேற்பது இதுவே முதல்முறையாகும்.
அமைச்சரவையின் முதல் கூட்டம்
மோடியின் அமைச்சரவையில் அவருடன் சேர்த்து மொத்தம் 72 அமைச்சர்கள் இருந்தனர்.
ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற இந்த மெகா நிகழ்வில் வங்கதேசம், நேபாளம், மாலத்தீவு தலைவர்கள் மற்றும் ஷாருக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
நேற்றைய தினம் யாருக்கு எந்த இலாகா என்பது குறித்த தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அவை நேற்று வரவில்லை.
இந்தச் சூழலில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மூன்றாவது அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு யாருக்கு எந்த இலாகா என்பது குறித்த தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |