முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! மூன்றாவது நாளாகவும் கஞ்சி வழங்கி வைப்பு (Photos)
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாளான இன்று (14.05.2023)வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
தமிழர் தாயக மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு - கிரான் சந்தியில் கஞ்சி தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
தமிழர் தாயக மக்கள் ஒருங்கிணைப்பு
இதன்போது தமிழர் தாயக மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் வி.லவக்குமார் தலைமையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருக்கோயில்
அம்பாறை - திருக்கோயில் பிரதான சந்தைவளாகத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டமானது யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தினரால் இணைந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியானது இன்று(14.05.2023) காலை 9 மணியளவில் முன்னெடுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
இதன் பொழுது அம்பாறை மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டத்திற்கான அரிசியை, திருக்கோயில் பகுதியில் உள்ள வீடுகளில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து பெற்று முள்ளிவாய்க்கால் கஞ்சியினை தயாரித்துகஞ்சியினை உறவுகளுக்கு வழங்கியுள்ளனர்.
தொடர்ச்சியாக உயிர்நீத்த உறுவுகளிற்கு ஈகைசுடரேற்றி அஞ்சலி செலுத்தபட்டுள்ளது.
மேலதிக செய்தி - கஜிந்தன்
பொத்துவில்
வடக்கு கிழக்கு தழுவியரீதியில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டமானது -அம்பாறை பொத்துவில் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொத்துவில்- சாலம்பையடி பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
இதன் பொழுது முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாறு அடங்கிய துண்டுபிரசுரமும் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை பொதத்துவில் பொலிஸார் ஜீப்ரக வாகனத்தில் வருகை தந்து அச்சுறுத்தும் பாணியில் விசாரித்த நிலையில் இராணுவ சீருடையணிந்த ஒருவரும் புலனாய்வாளர்களும் வந்து ஒளிப்படம் எடுத்து அச்சுறுத்தும் பாணியில் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலதிக செய்தி - கஜிந்தன்
யாழ். குருநகர்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால், மனித படுகொலை இடம்பெற்ற யாழ். குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நடைபெற்றது.
இதன்போது சுடரேற்றி, மலர்தூவி அக வணக்கத்துடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலதிக செய்தி - கஜிந்தன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |





