மக்களின் ஆதரவில் போராட்டம்! வவுனியா - கல்முனையில் புதிய காட்சிகள்
வவுனியா வசந்தி திரையரங்கில் இன்று (05) இரவு 6.30 மணிக்கு ‘போராட்டம்’ திரைப்படம் சிறப்பு காட்சியாக திரையிடப்படவுள்ளது.
தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா வழங்கும் இத்திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்துவரும் பேராதரவைத் தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் புதிய காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
போராட்டம் திரைப்படம்
‘போராட்டம்’ திரைப்படத்தை ராஜ் சிவராஜ் எழுதி இயக்கியுள்ளதுடன், பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.
றீகன் கந்தையா மற்றும் நிவேதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கால்பந்தாட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், ஒரு இளைஞனின் கனவு, குடும்பப் பின்னணி, காதல், நட்பு மற்றும் வாழ்க்கையில் அவர் எதிர்கொள்ளும் பல்வேறு போராட்டங்களை கதைக்களமாகக் கொண்டுள்ளது.

இத்திரைப்படத்தை IBC Tamil Productions மற்றும் BlackBoard ஆகிய நிறுவனங்கள் தயாரித்து வெளியிட்டுள்ளன.
அதேபோல், கல்முனையிலும் 05 மற்றும் 06ஆம் திகதிகளில் மாலை 6.30 மணிக்கு ‘போராட்டம்’ திரைப்படம் திரையிடப்படவுள்ளது.
மக்களே… குடும்பத்துடன் வசந்தி திரையரங்கிற்கு சென்று ‘போராட்டம்’ திரைப்படத்திற்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள்!
