மக்களின் பேராதரவு…சுவிஸில் மீண்டும் திரைக்கு வரும் ‘போராட்டம்’
உலகெங்கும் வாழும் தமிழ் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள ‘போராட்டம்’ திரைப்படம், மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க சுவிட்சர்லாந்தில் மீண்டும் திரையிடப்படவுள்ளது.
பாஸ்கரன் கந்தையாவின் தயாரிப்பில், ராஜ் சிவராஜ் இயக்கத்தில், பூவன் மதீசனின் இசையமைப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம், சுவிஸ் திரையரங்குகளில் ஏற்கனவே திரையிடப்பட்டு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
போராட்டம்
இந்நிலையில், அதிகளவான மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க சூரிச் மற்றும் லுகானோ ஆகிய நகரங்களில் மீண்டும் திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சூரிச் நகரில் உள்ள Cinema Claudia திரையரங்கில் எதிர்வரும் 10ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8 மணிக்கு திரைப்படம் திரையிடப்படவுள்ளது. அதேவேளை, லுகானோ CineStar திரையரங்கில் எதிர்வரும் 17ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு திரைப்படம் திரையிடப்படவுள்ளது.
இத்திரைப்படத்திற்கான நுழைவுக் கட்டணம் 20 சுவிஸ் பிராங்குகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் பேராதரவால் மீண்டும் திரையரங்கிற்கு வரும் ‘போராட்டம்’ திரைப்படம், அடுத்த தலைமுறையினரும் பார்க்க வேண்டிய முக்கியமான படைப்பாகக் குறிப்பிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.