திலீபன் சிலை அகற்றப்பட்டதன் பின்னணி என்ன..! நீயா- நானா போட்டியில் தமிழ் அரசியல் கட்சிகள்..
திலீபனின் சிலை அகற்றப்பட்டமை அகிம்சை வழியில் போராடி உயிர்நீத்த ஒரு தியாகிக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை என்று சமூக செயற்பாட்டாளர் தெய்வேந்திரம் இந்திரதாஸ் குறிப்பிட்டார்.
லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டி மற்றும் சுயலாப அரசியலே இவ்வாறான சர்ச்சைகளுக்கு முக்கிய காரணமாக அமைவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மேலும், 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் தியாகிகளின் நினைவேந்தல் நிகழ்வுகளை அரசியல் செல்வாக்கையும் வாக்குகளையும் பெறுவதற்கான கருவியாக சிலர் பயன்படுத்துகின்றனர் என அவர் தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கட்சிகளிடையே காணப்படும் ஒற்றுமையின்மை மற்றும் ஒருங்கிணைப்பின்மையும் இவ்வாறான பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கின்றது.
நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுப்பதில் முறையான சட்ட நடைமுறைகள் மற்றும் அனுமதிகள் பின்பற்றப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், போர் முடிந்து பல ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விட அரசியல் கட்சிகள் தங்களது சுயலாப அரசியலிலேயே கவனம் செலுத்துகின்றன.
தற்போதைய தமிழ் அரசியல் கட்டமைப்பில் மாற்றம் அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
ஊடகவியலாளர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் உள்ளிட்டோர் இணைந்து மக்களுக்காகச் சிந்திக்கும் புதிய அரசியல் கட்டமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க...
கேள்விக்குறியாகியுள்ள மாணவர்களின் ஒழுக்கம்! கந்தளாயில் பாடசாலை மாணவர்களுக்கு பொருத்தமற்ற சிகை அலங்காரம்