கேள்விக்குறியாகியுள்ள மாணவர்களின் ஒழுக்கம்! கந்தளாயில் பாடசாலை மாணவர்களுக்கு பொருத்தமற்ற சிகை அலங்காரம்
கந்தளாய் கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் இயங்கிவரும் சில சிகை அலங்கார நிலையங்களில், பாடசாலை மாணவர்களுக்கு பொருத்தமற்றதாகக் கருதப்படும் நவநாகரிக சிகை அலங்காரங்கள் மேற்கொள்ளப்படுவதாக பெற்றோர்களும் பாடசாலை சமூகத்தினரும் குற்றம் சாட்டுகின்றனர்.
பாடசாலை விதிமுறைகளுக்கு முரணான சிகை அலங்காரங்களுடன் சில மாணவர்கள் பாடசாலைக்கு வருவதாகவும், இதனால் மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் பாடசாலை ஒழுங்குமுறைகள் தொடர்பில் கவலைக்கிடமான நிலை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கவலைக்கிடமான நிலை
இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கந்தளாய் பகுதியிலுள்ள சில பாடசாலை நிர்வாகங்களால் கந்தளாய் பிரதேச சபைக்கு உத்தியோகபூர்வமாக கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனினும், கடிதங்கள் வழங்கப்பட்டு காலம் கடந்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என பெற்றோர்களும் பாடசாலை சமூகத்தினரும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இந்த விடயம் கந்தளாய் வலயக் கல்விப் பணிமனையின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அங்கிருந்தும் இதுவரை உரிய கவனம் செலுத்தப்படவில்லை மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் பாடசாலை விதிமுறைகள் தொடர்பான விடயம் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டும் நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என்றால், பாடசாலை நிர்வாகங்கள் யாரிடம் முறையிடுவது?
மாணவர்களின் ஒழுக்கத்தைப் பாதுகாப்பது யாருடைய பொறுப்பு? என்ற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளன.
எனவே, இந்த விடயத்தில் கந்தளாய் பிரதேச சபையும் கந்தளாய் வலயக் கல்விப் பணிமனையும் உடனடியாக தலையிட்டு, மாணவர்களுக்கு பொருத்தமற்ற சிகை அலங்காரங்களை மேற்கொள்ளும் நிலையங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர்களும் பாடசாலை சமூகத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
ரஷ்யாவின் பிளேக் ஆய்வகத்தில் கசிந்த பாக்டீரியா; ஒருவர் உயிரிழப்பு, கண்காணிப்பில் 200 பேர் News Lankasri