பரிசுத்த பாப்பரசரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய இரண்டரை லட்சம் மக்கள்
இதுவரை 2.5 லட்சம் பொதுமக்கள் பரிசுத்த பாப்பரசரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளதாக வத்திக்கான் அதிகாரிகளின் தகவல் தெரிவித்துள்ளனர்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் கடந்த 21ம் திகதி காலை 7.35 மணியளவில் காலமானார்.
பொது அஞ்சலி
அவருக்கு கல்லீரல் அழற்சி நோய் காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது.
அவரது மறைவால் உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க விசுவாசிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இவரது உடல் கடந்த மூன்று நாட்களாக வத்திக்கானில் பொது அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள்
வத்திக்கான் அதிகாரிகளின் தகவலின்படி, இதுவரை 2.5 லட்சம் பொதுமக்கள் போப்பின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இவர்களில் பலர் கடும் பாதுகாப்பு இடையிலும் நீண்ட வரிசைகளில் காத்திருந்து, இறுதி பார்வையிட்டுள்ளனர்.
பரிசுத்த பாப்பரசரின் இறுதிச்சடங்கு இன்று (26) காலை 10:00 மணிக்கு வாடிகனில் நடைபெறவுள்ளது.
இதில் உலகின் முக்கிய தலைவர்கள், மத குருக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்கின்றனர்.
டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) தனது மனைவியுடன் சேர்ந்து இந்த இறுதிச்சடங்கில் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சார்பாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்(Wijitha Herath) செல்லவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
போப் பிரான்சிஸின் மறைவு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்கர்களுக்கு ஒரு பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது. அவரது பணிகள் மற்றும் பணி நிலைப்பாடுகள் கடந்த பல ஆண்டுகளாக மத ஒற்றுமைக்காக ஈடுபட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
