புதிய பாப்பரசர் யார்! வெளிவரத் தொடங்கியுள்ள ஊகங்கள்
பாப்பரசர் பிரான்சிஸின் மரணத்துடன், உலகெங்கிலும் உள்ள ரோமன் கத்தோலிக்கர்கள் அவருக்குப் பிறகு யார் பாப்பரசராக வருவார் என்ற ஊகத்தை வெளியிட ஆரம்பித்துள்ளனர்.
பிரான்சிஸ் பாப்பசராக இருந்தபோது, வழங்கப்பட்ட கர்தினால் நியமனங்களின் தன்மையைக் கருத்தில் கொண்டு, அடுத்த பாப்பரசர், மீண்டும் ஒருமுறை ஐரோப்பியரல்லாதவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, பிரான்சிஸைப் போலவே அவர் திருச்சபையின் பழமைவாதப் பிரிவை எதிர்க்கும் மற்றொரு முற்போக்கானவராக இருப்பார் என்றும் சில எதிர்பார்ப்புகள் உள்ளன.
இருப்பினும், பிரான்சிஸ் அடக்கம் செய்யப்பட்டவுடன் நடைபெறும் தேர்தல் செயல்முறை மிகவும் இரகசியமானது.
இரகசிய மாநாடு
அத்துடன், சிஸ்டைன் சேப்பலின் புகைபோக்கியிலிருந்து வெளியேறும் வெள்ளை புகை, புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்பட்டதை உலகுக்கு தெரிவிக்கும் வரை, எந்த தகவலும் உறுதியானதாக இருக்காது.
ஒரு பாப்பரசர் இறந்தாலோ அல்லது பதவி விலகினாலோ, 80 வயதுக்குட்பட்ட கர்தினாக்கள், கிட்டத்தட்ட 1.4 பில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும், ஒரு இரகசிய மாநாட்டில் பங்கேற்பார்கள்.
இந்த நிலையில், கர்தினால்கள், எதிர்வரும் நாட்களில் ரோமுக்கு வரத் தொடங்கிய பிறகு, மாநாட்டின் திகதியை நிர்ணயிப்பார்கள்.
2025, ஏப்ரல் 21 நிலவரப்படி, உலகெங்கிலும் மொத்தம் 252 கர்தினால்கள் உள்ளனர். கர்தினால்கள் "உருவாக்கப்படுகிறார்கள்", அங்கு அவர்களுக்கு ஒரு மோதிரம், ஒரு சதுர தொப்பி - வழங்கப்படுகிறது, அவர்கள் பாப்பரசருக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதியளிக்கிறார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri
