மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் பதவி விலகல்!
மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிசாந்த அனுருத்த வீரசிங்க பதவி விலகல் கடிதத்தை போக்குவரத்து அமைச்சின் செயலருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்ததாகவும், வேறு இடத்துக்குப் பணியமர்வதற்காகவே இந்த முடிவை எடுத்ததாகவும், வீரசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது வெற்றிடமாக காணப்படும் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் பதவிக்கான புதிய நியமனம் தொடர்பான பெயர் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவிருந்தது.

இதேவேளை, போக்குவரத்து அமைச்சின் கீழ் செயல்படும் ஆறு நிறுவனங்களில் நான்கு நிறுவனங்களின் தலைவர்கள் இதுவரை தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன, இலங்கை போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் டாக்டர் பண்டுல திலீப் வித்தான, போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ருவன் விஜயமுனி மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நிசாந்த வீரசிங்க ஆகியோர் இவ்வாறு பதவி விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025
படு மாஸாக விஜய் வீட்டில் நடக்கும் காவேரியின் வளைபாப்பு... மகாநதி சீரியல் படப்பிடிப்பு தள வீடியோ இதோ Cineulagam
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri