பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு பின் என்ன நடக்கும்..!
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதல் லத்தீன் அமெரிக்கத் தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ், தனது 88 ஆவது வயதில் இன்று காலமானார்.
பாரம்பரிய ரீதியில், அவரின் மறைவிற்கு பின்னர், பிரான்சிஸின் பதவிக்கு இன்னொருவரை தேர்ந்தெடுக்க கர்தினால்கள் உரோமுக்கு வரவழைக்கப்படுவார்கள்.
நிமோனியாவால் இரு நுரையீரலும் பாதிக்கப்படடுள்ள நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வந்த பிரான்சிஸ் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.
இறுதி சடங்குகள்
அவர், சிகிச்சை பெற்று வந்த காலப்பகுதியில் அவரின் உடல் நிலை மிக மோசமாக இருந்த நிலையில், அவரின் இறுதி சடங்கிற்கான நடவடிக்கைகள் முன்னதாகவே மேற்கொள்ளப்பட்டன.
அதனை தொடர்ந்து அடுத்த போப்பிற்கான தெரிவு குறித்தும் பாரம்பரிய ரீதியில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இறையடி சேர்ந்துள்ள நிலையில், ரோமன் கத்தோலிக்க திருச்சபையால் அடுத்த போப் தெரிவிற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அதன்படி, அடுத்த போப்பினை தேர்ந்தெடுக்க கர்தினால்கள் இப்போது உரோமுக்கு வரவழைக்கப்படுவார்கள். பாரம்பரியத்தின் படி, போப்பின் மரணம் வத்திக்கான் அதிகாரிகளால் சடங்கு ரீதியாக உறுதிப்படுத்தப்படும், மேலும் ஒன்பது நாட்கள் துக்கம் அறிவிக்கப்படும்.
மேலும், இறுதி கிரியை செய்வது பொதுவாக நான்காவது மற்றும் ஆறாவது நாளுக்கு இடையில் நடக்கும். பொதுவாக பாப்பரசர்கள் வழக்கமாக வத்திக்கான் நகரில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் அடக்கம் செய்யப்படுவார்கள், ஆனால் வத்திக்கானின் சுவர்களுக்கு வெளியே உள்ள சாண்டா மரியா மாகியோர் பசிலிக்காவில் அடக்கம் செய்ய விரும்புவதாக பிரான்சிஸ் கூறியிருந்தார்.
புதிய போப் தெரிவு
ரோமில் ஒருமுறை, கர்தினால்கள் அடுத்த போப் யாராக இருக்க வேண்டும் என்பதை வாக்களிக்க ஒரு போப்பாண்டவர் மாநாட்டின் செயல்முறையை மேற்கொள்வார்கள்.
சபையிலிருந்து விலக்கப்படும் அபாயம் உள்ளதால், மாநாட்டிற்கு வெளியே உள்ள எவருடனும் கர்தினால்கள் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பாரம்பரியமாக போப்பாண்டவரின் இறுதிச் சடங்கு ஒரு விரிவான விவகாரமாக இருந்து வருகிறது, ஆனால் போப் பிரான்சிஸ் அண்மையில், முழு நடைமுறையையும் சிக்கலற்றதாக மாற்றும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தார்.
மேலும், ஒரு போப்பின் உடல், மூன்று வகையான சவப்பெட்டிகளில் அடக்கம் செய்யப்படும். சைப்ரஸ், நாக உலோகம் மற்றும் பலகை ஆகியவற்றால் அவை உருவாக்கப்படுகின்றன.
ஆனால் பிரான்சிஸ் அவரை மரம் மற்றும் நாகத்தால் ஆன ஒரே சவப்பெட்டியில் அடக்கம் செய்யுமாறு முன்னதாகவே தெரிவித்திருந்தார்.
அந்தவகையில், போப்பின் இறுதிச் சடங்கிற்கு சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு, புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் செயல்முறையை மிகவும் இரகசியமாக நடத்த கர்தினால்கள் கல்லூரி சிஸ்டைன் தேவாலயத்தில் கூடும்.
வாக்களிப்பு
தொழில்நுட்ப ரீதியாக, ஞானஸ்நானம் பெற்ற எந்த ஆண் ரோமன் கத்தோலிக்கரும் போப்பாண்டவராக பதவியேற்க தகுதியுடையவர், ஆனால் கடந்த 700 ஆண்டுகளாக, போப் எப்போதும் கர்தினால்கள் கல்லூரியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்.
இதன்படி, போப்பினை தேர்ந்தெடுக்கும் வாக்களிப்பு நாளில், சிஸ்டைன் சேப்பல் மூடப்பட்டு, இரகசியக் காப்புப் பிரமாணம் செய்து கொண்ட சுமார் 120 கர்தினால்கள் உள்ளே பூட்டி வைக்கப்பட்டு வாக்களிப்பு நடத்தப்படும்.
இதன்போது, எந்த வேட்பாளரும் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறவில்லை என்றால், மற்றொரு சுற்று வாக்களிப்பு நடைபெறும். ஒரு நாளைக்கு நான்கு சுற்றுகள் வரை இருக்கலாம்.
கடந்த 2013ஆம் ஆண்டில் போப் பிரான்சிஸைத் தேர்ந்தெடுக்க சுமார் 24 மணிநேரமும் ஐந்து வாக்குச்சீட்டுகளும் எடுத்துள்ளன. எனவே இந்த செயன்முறை அதிக நேரம் எடுக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
அதனை தொடர்ந்து, வாக்குகள் எண்ணப்பட்டவுடன், அவை சிஸ்டைன் சேப்பலுக்குள் ஒரு அடுப்பில் இட்டு எரிக்கப்படுகின்றன, இது புகைபோக்கி வழியாக வெளி உலகிற்கு ஒரு புகை சமிக்ஞையை அனுப்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, ஒரு போப் தெரிவு செய்யப்பட்டுள்ளாரா இல்லையா என்பது வெளியுலகிற்கு காட்டப்படும் என அந்நாட்டு பாரம்பரிய முறை குறிப்பிடுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 17 மணி நேரம் முன்

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
