லஞ்சம் பெற்ற நீதிபதியை சுற்றிவளைத்து பிடித்த அதிகாரிகள்
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் காதி நீதிபதி ஒருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி பகுதியை சேர்ந்த ஒரு தொழிலதிபர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், கெலியோயாவில் உள்ள சந்தேக நபரின் அலுவலகத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விவாகரத்து வழக்கொன்றின் தீர்ப்பை விரைவாக வழங்குவதற்காக 200,000 ரூபாய் இலஞ்சம் பெற்றுக்கொண்ட கெலி ஓயா பிரதேச காதி நீதிபதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
விவகாரத்து வழக்கு
மனுதாரரின் மகன்களில் ஒருவர் தாக்கல் செய்த விவாகரத்து வழக்கில் தீர்ப்பை விரைவாக வழங்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, 19 ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
கண்டி நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள கதி நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்ட தீர்ப்பின் நகலையும் விவாகரத்து சான்றிதழையும் வழங்க 200,000 ரூபாய் இலஞ்சம் கோரப்பட்டுள்ளது.
இன்று காலை 11.00 மணியளவில் லஞ்சம் பெற்ற போது இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 19 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
