பல மணிநேர விசாரணைகளின் பின்னர் சிஐடியில் இருந்து வெளியேறிய மைத்திரி
புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
ஜனாதிபதி நிதியிலிருந்து அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலருக்கு நிதி வழங்கியது தொடர்பாக வாக்குமூலம் அளிக்க அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதன்படி, பல மணி நேர விசாரணைகளின் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (21) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
காரணம்..
இந்நிலையில், தற்போது அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருப்பதற்கான காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை.

அதேவேளை, அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக இதற்கு முன்னரும் மைத்திரி குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam