பிள்ளையானுக்காக முதலை கண்ணீர் வடிக்கும் நாமல்.. விரைவில் உண்மைகள் அம்பலம்!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கவலைப்படுவதற்கான காரணம் எதிர்காலத்தில் அம்பலமாகும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில், "பிள்ளையான் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கவலைப்படுவதற்கு காரணம் இருக்கின்றது.
அந்த காரணம் எதிர்காலத்தில் அனைவருக்கும் தெளிவாகிவிடும். அதன்படி, இந்த விவகாரம் குறித்து புலனாய்வுக் குழு முறையான விசாரணைகளை நடத்தி வருகின்றது.
குற்றப்பத்திரிகை
அரசாங்கம் என்ற வகையில், விசாரணைகளுக்குத் தேவையான வசதிகளை மட்டுமே எமது தரப்பு வழங்கும். விசாரணைகளுக்குப் பிறகு, சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை சமர்ப்பிப்பார்.
அதன் பிறகு, மூளையாகச் செயல்பட்டவர்கள் நீதிமன்றங்கள் மூலம் தண்டிக்கப்படுவார்கள். ஏப்ரல் 21 தாக்குதலில் தொடர்புடைய உண்மையான சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவார்கள்.
எனவே இத்தகைய சூழ்நிலையில், உதய கம்மன்பில, ரணில் விக்ரமசிங்க, நாமல் ராஜபக்ச மற்றும் சரத் வீரசேகர போன்றவர்கள் வருத்தமடைந்திருப்பது ஆச்சரியமல்ல” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது 11 மணி நேரம் முன்

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri
