பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் காலமானார்..!
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இன்று காலை காலமானார் என்று வத்திக்கான் கேமர்லெங்கோ கார்டினல் கெவின் ஃபெரெல் அறிவித்தார்.
அவர், இன்று காலை 7:35 மணிக்கு இறையடி சேர்ந்ததாக வத்திக்கான் செய்தி அறிவித்துள்ளது.
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதல் லத்தீன் அமெரிக்கத் தலைவரான போப் பிரான்சிஸ், தனது 88 ஆவது வயதில் காலமானார் என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது.
வத்திக்கான் செய்தி
அண்மையில், கடுமையான நிமோனியா பாதிப்பின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார்.
இந்நிலையில், இன்று கேமர்லெங்கோ கார்டினல் ஃபெரெல், "அன்புள்ள சகோதர சகோதரிகளே, நமது பரிசுத்த தந்தை பிரான்சிஸின் மரணத்தை நான் மிகுந்த வருத்தத்துடன் அறிவிக்க வேண்டும்.
இன்று காலை 7:35 மணிக்கு ரோம் பாப்பரசர் பிரான்சிஸ், எமது தந்தையின் வீட்டிற்குத் திரும்பினார்." என்று வத்திக்கானின் தொலைக்காட்சி காணொளியில் அறிவித்தார்.
View of St. Peter's Square following Pope Francis’ death https://t.co/PEJU0kOTSe
— Reuters (@Reuters) April 21, 2025
பாப்பரசர் பிரான்சிஸ் தனது பதவிக் காலத்தின் பெரும்பகுதியை அமைதிக்காக வேண்டுகோள் விடுப்பதற்காக அர்ப்பணித்துள்ளார்.
நேற்றைய தினம், உலகளாவிய ரீதியில், உயிர்த்த ஞாயிறு தினம் கொண்டாடப்பட்ட நிலையில், வத்திக்கானில் இடம்பெற்ற ஆராதனைகளிலும் பங்கேற்றுள்ளார்.
Pope Francis died on Easter Monday, April 21, 2025, at the age of 88 at his residence in the Vatican's Casa Santa Marta. pic.twitter.com/jUIkbplVi2
— Vatican News (@VaticanNews) April 21, 2025
இறுதி செய்தி..
இதன்போது, அவர் தனது செய்தியை வெளியிடும் போது காசா முதல் சஹேல் வரை அனைத்து வன்முறைகளும் முடிவுக்கு வர உர்பி எட் ஓர்பியில் பிரார்த்தனை செய்தார்.
மேலும், அவரின் செய்தியில், "என் நம்பிக்கையான கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்" என்று அறிவித்த போப் பிரான்சிஸ், விசுவாசிகள் தங்கள் பார்வையை காலியான கல்லறையின் பக்கம் திருப்புமாறு அழைப்பு விடுத்தார்.
உயிர்த்தெழுதலை ஒரு சுருக்கமான யோசனையாக அல்ல, மாறாக ஒரு உயிருள்ள சக்தியாக - சவால் செய்யும், குணப்படுத்தும் மற்றும் அதிகாரம் அளிக்கும் ஒன்றாக அவர் பேசினார்.
"நம்மை ஒடுக்கும் அனைத்து தீமைகளையும் அவர் தானே எடுத்துக்கொண்டு அதை உருமாற்றுகிறார்." "அன்பு வெறுப்பை வென்றுள்ளது, ஒளி இருளை வென்றுள்ளது, உண்மை பொய்யை வென்றுள்ளது.
மன்னிப்பு பழிவாங்கலை வென்றுள்ளது," என்று அவர் கூறினார். "வரலாற்றிலிருந்து தீமை மறைந்துவிடவில்லை; அது இறுதிவரை இருக்கும், ஆனால் அது இனி மேலோங்கவில்லை இந்த நாளின் அருளை ஏற்றுக்கொள்பவர்கள் மீது அதற்கு இனி அதிகாரம் இல்லை."
ஆனால் அவரது வார்த்தைகள் வெறும் விசுவாசப் பிரகடனமாக மட்டும் இருக்கவில்லை - அவை மனிதகுலத்திற்கு, மனிதகுலத்திற்காக ஒரு கூக்குரலாக இருந்தன. இந்த மகிழ்ச்சியான தருணத்திலும் கூட, போப்பின் பார்வை துன்பத்திலிருந்து விலகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் நேற்றைய தினம், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸினையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
It was an honor to meet with Pope Francis, Prime Minister Meloni, and Church officials in Italy this weekend.
— Vice President JD Vance (@VP) April 21, 2025
Visiting Rome with my family during Holy Week was an incredible experience. pic.twitter.com/pAxKmKxUst
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 16 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள் News Lankasri
