போப் பிரான்சிஸின் மறைவு உலகத்தின் துக்க தினம்! ஐரோப்பிய ஆணையம் இரங்கல்
'போப் பிரான்சிஸின் மறைவுக்கு உலகம் துக்கத்தை அனுஷ்டிக்கிறது'' என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கத்தோலிக்க திருச்சபை தலைவர் பரிசுத்த பாப்பரசர் போப் பிரான்சிஸ்சின் மறைவு தொடர்பில் ஐரோப்பிய ஆணையகத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன்(Ursula von der Leyen) வெளியிட்ட இரங்கல் செய்தியில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
Today, the world mourns the passing of Pope Francis.
— Ursula von der Leyen (@vonderleyen) April 21, 2025
He inspired millions, far beyond the Catholic Church, with his humility and love so pure for the less fortunate.
My thoughts are with all who feel this profound loss.
May they find solace in the idea that Pope Francis’… pic.twitter.com/FiI6SASNl8
பிரான்சிஸின் மரபு
“கத்தோலிக்க திருச்சபையைத் தாண்டி, அவர் தனது பணிவு மற்றும் ஏழைகள் மீதான தூய்மையான அன்பினால் மில்லியன் கணக்கான மக்களை ஊக்கப்படுத்தினார்.
இந்த ஆழ்ந்த இழப்பை உணரும் அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன.
போப் பிரான்சிஸின் மரபு நம்மை மிகவும் நீதியான, அமைதியான மற்றும் இரக்கமுள்ள உலகத்தை நோக்கி தொடர்ந்து வழிநடத்தும் என்ற எண்ணத்தில் அவர்கள் ஆறுதல் காணட்டும்” என தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 17 மணி நேரம் முன்

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
