தமிழர் பகுதியொன்றில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது
வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற முற்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம்(21.05) மாலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்சம் கோருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்றைய தினம் (21.05 பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் அதிகாரிகள் குறித்த பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற முற்பட்ட போது கைது செய்துள்ளனர்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது
காணி விடயம் ஒன்று தொடர்பாக குறித்த இலஞ்சம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட பொறுப்பதிகாரி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவரை இன்றைய தினம் (22.05) வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan