யாழில் சம்பவித்த விபத்தில் பாடசாலை மாணவிகள் உட்பட ஐந்து பேர் காயம்
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் ஐந்து பேர் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வடமராட்சி, கிழக்கு மணற்காடு சந்திப் பகுதியில் சம்பவித்த விபத்தில் ஆசிரியர்கள் இருவரும் பாடசாலைக்கு பிள்ளையை ஏற்றிச் சென்று கொண்டிருந்த தாய் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளும் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான ஆசிரியர் ஒருவரும், பிள்ளைகளை ஏற்றி சென்ற தாயும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் விபத்து
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
குடத்தனை - கிழக்கு பகுதியிலுள்ள அரசினர் தமிழ் கலவன் பாட சாலைக்கு தனது இரண்டு பிள்ளைகளை அழைத்து சென்ற மோட்டார் சைக்கிளும் மருதங்கேணி நோக்கி சென்று கொண்டிருந்த இரண்டு ஆசிரியர்களது மோட்டார் சைக்கிளும் ஒன்றை ஒன்று மோதியதால் விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் விபத்திற்குள்ளான 5 பேரும் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து விபத்தில் காயமடைந்த ஆசிரியர் ஒருவரும், பிள்ளைகளை ஏற்றி சென்ற தாயும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
You may like this..
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam