பிரித்தானியாவிற்குள் புதிதாக நுழையும் இலங்கையர்களின் எதிர்காலம்
பிரித்தானிய அரசாங்கம், குடியேறிகள் மற்றும் அகதிகள் தொடர்பில் பல்வேறுபட்ட சட்டதிருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவற்றில் குறிப்பாக, புலம்பெயர்ந்தோருக்கான விசா கொள்கையை கடுமையாக்குவது குறித்து பிரித்தானியா நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், பிரித்தானிய அரசாங்கத்தின் இந்த தீர்மானத்திற்குள் உள்ளடங்கும் விடயங்கள் மற்றும் இந்நடவடிக்கைக்குள் எப்படிப்பட்டவர்கள் உள்வாங்கப்படவுள்ளார்கள் போன்ற கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.
அதேவேளை, இனிவரும் காலங்களில் பிரித்தானியாவிற்கு செல்லவுள்ள மற்றும் தற்போது அங்குள்ள இலங்கையர்கள் எவ்வாறான திருப்பங்களை எதிர்நோக்கவுள்ளார்கள் என்பது ஆராயப்பட வேண்டிய ஒரு விடயம் ஆகும்.
எனவே, இவ்விடயம் தொடர்பில் பல முக்கிய தரவுகளை ஆராய்கின்றது பிரித்தானியாவில் உள்ள மூத்த சட்டத்தரணி அருண் கணநாதனுடனான ஊடறுப்பு நிகழ்ச்சி,

கொழும்பில் இளம் யுவதிக்கு உதவிய குடும்பம் ஒன்றுக்கு அதிர்ச்சி : கொலை மிரட்டல் விடுக்கும் மர்ம கும்பல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
