மொட்டுக்கட்சியுடன் கூட்டணி அமைக்கும் ஐ.தே.கட்சி
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இணைந்து போட்டியிடும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகள் கூட்டணியை அமைக்க தயாராகி வருவதாக தெரியவருகிறது.
கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தும் சிரேஷ்ட பிரதிநிதிகள்
ஏற்கனவே பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட பிரதிநிதிகள் கூட்டணியை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக பேசப்படுகிறது.
ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கான சட்ட ரீதியான அதிகாரம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கும்.
இதன் காரணராக பல பிரதான கட்சிகள் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான திட்டங்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
சுயாதீன கட்சிகளின் கூட்டமைப்பு அமைக்க உள்ள புதிய அரசியல் கூட்டணியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடிய பின்னர் முடிவு செய்யலாம் என அந்த கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
விமவ் வீரவங்ச தலைமையில் புதிய கூட்டணி
புதிய அரசியல் கூட்டணியின் தலைவராக விமல் வீரவங்சவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் தலைமைத்துவ சபையின் கீழ் ஏனை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் செயற்பாடுவார்கள்.
புதிய கூட்டணியின் யாப்பு மற்றும் கொள்கை தொடர்பாக அரசியல் கட்சிகள் தனித்தனியாக யோசனைகளை முன்வைத்துள்ளன.
இந்த புதிய கூட்டணியை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் கூட்டம் எதிர்வரும் 4 ஆம் திகதி மகரகமை இளைஞர் சேவைகள் மன்றத்தின் மண்டபத்தில் நடத்தப்பட உள்ளது.
வேறு கட்சிகளையும் இந்த கூட்டணியில் இணைப்பது சம்பந்தமாக தற்போது பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.