சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்! கடும் மன வருத்தத்தில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் பதவிகள் கிடைக்காமையினால் ஏமாற்றமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு ஏமாற்றமடைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் குழுவொன்று கடந்த வியாழக்கிழமை இரவு முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஒருவரின் வீட்டில் விசேட கலந்துரையாடலை நடத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
கோட்டாபயவின் இலங்கை விஜயத்தில் பின்னடைவு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இலங்கை விஜயத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், இக்குழுவினர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை சந்தித்து தமது குறைகளை முன்வைக்க தயாராகி இருப்பதாகவும் தெரியவருகின்றது.
மேலும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கமொன்றை அமைப்பதற்கு இந்த குழுவினர் தம்மை முழுமையாக அர்ப்பணித்துள்ளதாகவும், இருப்பினும் அரசாங்கத்தில் தற்போது இடமளிக்காததையிட்டு மிகவும் கவலையடைந்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

தோட்டத்தில் புல் வெட்டியதற்காக வெளிநாட்டவருக்கு குடியுரிமை மறுப்பு: சுவிஸ் நீதிமன்றம் அதிரடி News Lankasri
