கோட்டாபய ராஜபக்சவின் மீள் வருகை தொடர்பில் வெளியான புதிய தகவல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 24 ஆம் திகதி நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளில் உண்மையில்லை என கோட்டாபயவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலத்த பாதுகாப்பு
கோட்டாபய ராஜபக்சவின் வருகையை பலர் எதிர்பார்ப்பதாகவும் ஆனால் அவர் வரும் திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை,மிரிஹானில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட இல்லம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில்,முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இலங்கை வருகை அடுத்த மாதம் (செப்டெம்பர்) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என கொழும்பு அரசியல் மட்டங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச, இம்மாத இறுதியில் நாடு திரும்புவார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இச்செய்தி வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri