பிரதமராகவுள்ள கோட்டாபய - பதவியை விட்டுக்கொடுக்க தயாராகும் பெண்
இலங்கைக்கு வரவிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் தீவிர அரசியலுக்குக் கொண்டுவர பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு திட்டமிட்டுள்ளது
முன்னாள் ஜனாதிபதியை தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு கொண்டுவர இந்த குழு திட்டமிட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவின் தீர்மானம்

பொதுஜன பெரமுனவை சேர்ந்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான சீதா அரம்பேபொல, தனது பதவியை விட்டு விலகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, இன்னும் சில வாரங்களில் அமைக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு கோட்டாபய ராஜபக்சவின் பெயரை முன்மொழிய பொஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராகவுள்ளது.
பெரும்பான்மையினர் ஆதரவு

மேலும் இது தொடர்பான தீர்மானம் ஒன்றில் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும் பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri