அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் குறித்து வெளியான தகவல்
அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அடுத்த வாரம் பதவியேற்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி 30 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
இரண்டுக்கு மேற்பட்ட அமைச்சு பொறுப்பு உள்ளவர்கள் ஒன்றை இழக்கலாம்
தற்போது தலா இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அமைச்சு பொறுப்புக்களை வைத்திருக்கும் பெரும்பாலான அமைச்சர்கள், புதிதாக வருபவர்களுக்கு இடமளிப்பதற்காக அவற்றில் ஒன்றை இழக்க வேண்டியேற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் கட்சிகளின் நிலைப்பாடுகளைப் பொருட்படுத்தாமல் அவர்களின் தனிப்பட்ட திறன்களில் அரசாங்கத்துடன் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரச நிறுவனங்களின் தலைமைப் பதவிகளுக்கும் புதிய நியமனம்
சுமார் 40 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதியஅமைச்சரவை நியமிக்கப்பட்டதும், புதிய அரசாங்கம் பல்வேறு அரச நிறுவனங்களின்
தலைமைப் பதவிகளுக்கு புதியவர்களை நியமிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam
