ஒரு வாரத்திற்கு புதிய அமைச்சரவை நியமனம் தாமதமாகும் என தகவல்
புதிய அமைச்சரவையை அமைப்பது இன்னும் ஒரு வாரத்திற்கு தாமதமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக கட்சிகளுடன் தனித்தனியே விவாதங்கள் நடைபெற்று வருவதால், புதிய அமைச்சரவை நியமனம் தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தி, அரசாங்கத்துடன் அணிசேர்க்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளார்.
இருப்பினும், அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அமைச்சரவைப் பொறுப்புகளை ஏற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றனர்.
நிரந்தர அமைச்சரவை அடுத்த வாரம் நியமனம் |
நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பம்
நாடாளுமன்றத்தை வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமைக்கப்படவுள்ள நாடாளுமன்ற குழுக்களுக்கு தலைமை தாங்குவதற்கு பதிலாக, அமைச்சுப் பொறுப்புகளை வகிக்கவே இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஒரு கட்சியாக அரசாங்கத்தில் இணையும் வாய்ப்புகள் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.
மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி, அரசாங்கத்துடன் இணைவதற்கான
தனது முடிவை தாமதப்படுத்தத் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
