விவசாயிகளுக்கு ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lanka Ministry of Agriculture
By Jenitha Aug 20, 2022 03:19 PM GMT
Report

விவசாயத்தில் அதிக கவனம் செலுத்தி பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வடமத்திய மாகாண பிரதம சங்கநாயக கலாநிதி வண. பல்லேகம சிறினிவாச தேரருடன் இன்று (20) முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்போகத்திற்குத் தேவையான உரங்களை எந்தத் தாமதமும் இன்றி விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

உரப் பிரச்சினை

விவசாயிகளுக்கு ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி | Sri Lanka President Special Announcement

பொருளாதாரத்தை மீட்பதற்கு முக்கிய காரணியாக விவசாயத்தில் அதிக கவனம் செலுத்தி பொருளாதார பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

“தேயிலை, இறப்பர், தென்னை போன்ற பயிர்களுக்கு உரம் வழங்கும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது.

மேலும், சோளம் பயிர்ச்செய்கையை ஊக்கப்படுத்தினால், கோழிப்பண்ணை கைத்தொழிலை தொடர முடியும். சோளத்திற்கான விதை பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய விரைவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பு 

விவசாயிகளுக்கு ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி | Sri Lanka President Special Announcement

தமது பிரதேசங்களில் விவசாயத்திற்கு தேவையான உரம் , எரிபொருள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் உள்ளதா? என்பதைக் கண்டறியும் பொறுப்பை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதோடு, மத வழிபாட்டுத்தளங்களின் மேம்பாடு குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது.

அதன் பிரகாரம், மகா விகாரையின் அகழ்வுப் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன. அதன் மூலம் மியான்மார், தாய்லாந்து போன்ற பௌத்த நாடுகளிலிருந்து பெருமளவிலான மக்களை இந்நாட்டிற்கு எம்மால் அழைத்து வர முடியும்” என்றார்.

இது தொடர்பில் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க குறிப்பிடுகையில்,

“தற்போது சிறு போகத்துக்குத் தேவையான உரம் மற்றும் எரிபொருளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி பெரும்போகத்தை ஒரு முழுமையான போகமாக மாற்றுவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

உர மானியங்களைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சி

விவசாயிகளுக்கு ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி | Sri Lanka President Special Announcement

உர மானியங்களைப் பெற்றுக்கொள்வதற்கு உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி அதேபோன்று அமெரிக்கா மற்றும் பிற உதவி நிறுவனங்களின் ஆதரவைப் பெற நாங்கள் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

சோளப் பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதன் மூலம் கால்நடைத் தீவன இறக்குமதியை குறைக்கலாம். சோளப் பயிர்ச்செய்கைக்கு விதைகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் தேவை.

நாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தின் ஊடாக அந்த அம்சங்கள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

எதிர்வரும் போகத்தில் சோளம் பயிரிட ஏராளமானோர் காத்திருக்கின்றனர். அரச நிறுவனங்களின் ஊடாக சோள விதைகளை இறக்குமதி செய்வதற்கு அடுத்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும்.

மேலும், தனியாரிடம் இருந்து சோள விதைகளை இறக்குமதி செய்ய ஒதுக்கப்படும் தொகையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான எஸ்.எம். சந்திரசேன, துமிந்த திசாநாயக்க, ஷெஹான் சேமசிங்க ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன, முன்னாள் அமைச்சர்களான தயா கமகே, அனோமா கமகே. , எஸ்.டி. சேமசிங்க, வடமத்திய மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சென்னை, India

08 Sep, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US