நாமலை சந்திக்க அடுத்தடுத்து சிறைச்சாலைக்கு சென்ற அரசியல்வாதிகள்
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்திக்க அரசியல்வாதிகள் பலர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எயார்பஸ் ஒப்பந்தத்தில் நடந்ததாக கூறப்படும் மோசடி சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நாமல் ராஜபக்சவின் நலம்
இந்நிலையில், நாமல் ராஜபக்சவின் நலம் குறித்து விசாரிப்பதற்காக, அவரது தாயார் ஷிரந்தி ராஜபக்ச சிறை வளாகத்திற்கு இன்று காலை சென்றிருந்தார்.
இதனையடுத்து பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பிலவும் நாமல் ராஜபக்சவை சந்திக்க சற்றுமுன் வெலிக்கடை சிறைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவின் நலன் குறித்து விசாரிப்பதற்காக அவர் வெலிக்கடை சிறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேவர்தனவும் வெலிக்கடை சிறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று முன் தினம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகன் நாமல் ராஜபக்சவை நேரில் சென்று சந்தித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.