சிறையில் வாடும் தன் மகனை சந்திக்கச் சென்ற ஷிரந்தி ராஜபக்ச
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் நலம் விசாரிப்பதற்காக, அவரது தாயார் ஷிரந்தி ராஜபக்ச சிறை வளாகத்திற்கு சென்றுள்ளார்.
கடந்த 4ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிய நாமல் ராஜபக்ச, விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டார்.
நலம் விசாரிப்பு
இதனை தொடர்ந்து, கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட நிலையில், அவரை 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இதற்கமைய, அவர் வெலிக்கடை சிறைச்சாலையில் அதிதீவிர பாதுகாப்பு கொண்ட விசேட அறையில் காவலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம், தனது மகனை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த சிறைச்சாலைக்கு சென்றிருந்த வேளை, இன்று நாமலின் தாயான ஷிரந்தி ராஜபக்ச அவரை சந்தித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22