அரசியல்வாதிகள் முன்னுதாரணத்தை வழங்க வேண்டும்
நாட்டில் எரிபொருள் நெருக்கடி உருவாகியுள்ள சந்தர்ப்பத்தில் அரசியல்வாதிகள் தமது வாகனங்களுக்கு முன்னால் மற்றும் பின்னால் செல்லும் வாகனங்களை குறைத்து நாட்டுக்கு முன்னுதாரணத்தை வழங்க வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளரான ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட சிறப்பு பாதுகாப்புடன் பயணம் செய்யக் கூடிய முக்கிய பிரமுகர்கள் இருக்கின்றனர்.
இவர்களை தவிர ஏனைய அரசியல்வாதிகள் தமது அர்ப்பணிப்பை நாட்டுக்கு முன்னால் ஒப்புவித்து காட்ட வேண்டும். இப்படியான சந்தர்ப்பத்தில் அரசியல்வாதி சிக்கனம் தொடர்பில் முன்னுதாரணத்தை வழங்கும் பாத்திரமாக மாற வேண்டும்.
மக்கள் எரிபொருளை கொள்வனவு செய்ய கொள்கலன்களை கையில் வைத்துக்கொண்டு வரிசைகளில் நிற்கும் போது அரசியல்வாதிகள் முன்னாலும் பின்னாலும் 5 முதல் ஆறு வாகனங்களுடன் பயணம் செய்யும் போது மக்களுக்கு கோபம் ஏற்படும்.
நான் ஆரம்பத்தில் இருந்தே தனியாக வாகனத்தில் பயணங்களை மேற்கொள்ளும் அரசியல்வாதி எனவும் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam