அனோஜன் விவகாரத்தில் அரசியல் செய்யும் எதிர்க்கட்சியினர் - அநுர தரப்பு குற்றச்சாட்டு
சவுதி அரேபியாவில் சிக்கியுள்ள அனோஜனை விரைவாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கு NPP அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. ஆனால், அனோஜனின் பெயரைப் பயன்படுத்தி முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் அரசியல் செய்வதாக அறிய முடிகின்றது என இலங்கையின் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகம் வழங்கும் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சவுதி அரேபியாவின் உயர் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனைக் காப்பாற்றுவதற்காக அநுர அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவொன்று சவுதிக்குச் சென்று மேன்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், இந்த விடயத்தை மீண்டும் மீண்டும் பேசுவதன் மூலம் அதனைச் சிக்கலுக்குள்ளாக்குகின்றனர்.
அதேபோன்று, அனோஜன் பதிவிட்ட விடயத்தைச் சவுதி அரசாங்கத்துக்கு ஒரு தமிழர்தான் அனுப்பி வைத்துள்ளார் என்ற தகவலும் அறிய முடிகின்றது. அனோஜன் என்ற பெயரைப் பயன்படுத்தி அநுர அரசாங்கத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதற்குச் சிலர் சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என்றார்.
நிதி ஒதுக்கீட்டில் தமிழ் பிரதேசங்களுக்கு பாரபட்சம் காட்டும் அரசு - பிரதேச சபைத் தலைவர் குற்றச்சாட்டு