தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் : ஜாட்சன் பிகிராடோ

Sri Lankan Tamils Tamils Election
By Ashik Aug 01, 2024 10:55 PM GMT
Report

வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களாகிய நாம் இன்று எதிர் கொண்டு வரும் அரச இனவாத அடக்கு முறையில் இருந்து மீண்டு கௌரவமான உரிமைகளை அனுபவிக்கும் பிரஜைகளாக வாழ வேண்டுமாயின் நிலையான சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வே அவசியம் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் வடமாகாண இணைப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல் முனைவின் இரண்டாம் வருடத்தையொட்டி ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வு குறித்து யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்று (01.08.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

வடக்கு - கிழக்கு சார்ந்த பொது வேட்பாளர் விடயம் தேவையற்றது : எமில்காந்தன்

வடக்கு - கிழக்கு சார்ந்த பொது வேட்பாளர் விடயம் தேவையற்றது : எமில்காந்தன்

அரச இனவாத அடக்குமுறை

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு நிலையான, கௌரவமான, உரிமைகளுடன் கூடிய நிலையான அரசியல் தீர்வு கோரி 2022 ஆம் ஆண்டு ஆவணி முதலாம் திகதி, சுழற்சி முறையிலான 100 நாட்கள் செயல் முனைவினை ஆரம்பித்து, 2022 கார்த்திகை எட்டாம் திகதி சமஸ்டி தீர்வுக்கான மக்கள் பிரகடனத்தை வெளியிட்டோம்.

இன்று வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களான நாம் எதிர்கொண்டு வரும் அரச இனவாத அடக்குமுறையில் இருந்து மீண்டு கௌரவமான, உரிமைகளை அனுபவிக்கும் பிரஜைகளாக வாழ வேண்டுமாயின் நிலையான அரசியல் தீர்வு அவசியம்.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் : ஜாட்சன் பிகிராடோ | Political Solution Of Samasti Should Be Presented

ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஸ்டி முறையிலான தீர்வு ஒன்றை யே நாம் திடமாக வலியுறுத்தி நிற்கிறோம். இலங்கையில் நாம் சிறுபான்மையினர் அல்ல.

இலங்கையின் வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் எமக்கான சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய இறைமையுள்ள மக்கள் சமூகத் தினராவோம்.எமது சுயநிர்ணய உரிமை, இறைமை என்பதை சமஸ்டி முறைமையின் மூலம் உறுதி செய்து கொள்ள திடசங்கற்பம் கொண்டுள்ளோம்.

என்னை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது : ஷானி அபேசேகர

என்னை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது : ஷானி அபேசேகர

அரசியல் தீர்வுகள் 

இதுவரை காலமும் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசியல் தலைமைகள் அரசியல் தீர்வுகள் பற்றி வாயளவில் கதைத்து தமிழ் மக்களை ஏமாற்றி வந்துவிட்டனர். எவ்வளவு காலத்துக்கு எமது வருங்கால சந்ததியினரும் இந்த அடக்கு முறைகளையும் ஏமாற்றங்களையும் அனுபவிக்கப் போகின்றனர்.

எமது தலைமுறையுடன் துன்பங்களை முடிவுக்குக் கொண்டுவர ஒரு மக்கள் சமூகமாக ஒருங்கிணைந்து செயல்படுவோம். அதற்காக, அனைவரும் ஜனநாயக வழி நின்று செயல்படும் ஒரு சமூக இயக்கமாக பரிணமிக்க வேண்டும்.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் : ஜாட்சன் பிகிராடோ | Political Solution Of Samasti Should Be Presented

சிங்கள அரசியல் தலைமைகளுக்கு நாம் பகிரங்கமான கோரிக்கையை முன் வைக்கிறோம். ஜனாதிபதி தேர்தல் போட்டி இடப்போகும் வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும். சமஸ்டி கொள்கையை முன்னெடுக்கும் நபரே இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும்.

தமிழ் பேசும் மக்களான எமது மொழி, மத, அரசியல், பொருளாதார உரிமைகளை பாதுகாத்து முன்னெடுக்கும், இனவாதத்தை எதிர்க்கும் வேட்பாளருக்கே தமிழ் (வடக்கு கிழக்கு), முஸ்லிம், மலையகத் தமிழ் மக்கள் வாக்களிப்போம். சமஸ்டியே தீர்வு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்த இளம் தமிழருக்கு அழைப்பு

பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்த இளம் தமிழருக்கு அழைப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US