மன்னார் வைத்தியசாலையை சுற்றும் அரசியல்..! தாயொருவரின் உருக்கமான கோரிக்கை
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டு வர வேண்டும் என அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட தாயொருவர் உருக்கமான கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
மன்னார் மடுத் திருவிழா போன்ற நிகழ்வுகளின் போது, ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்கின்றனர்.
அவர்களில் யாருக்காவது அவசரமாக வைத்தியசாலை செல்ல நேரிட்டால் யாழ். போதனா வைத்தியசாலைக்கே செல்ல வேண்டிய நிலை உள்ளது.
ஏனெனில், மன்னார் வைத்தியசாலை அந்த அளவுக்கு வசதிகள் குறைந்த வைத்தியசாலையாக உள்ளது.
மாகாண மட்டத்தில் அதனை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகள் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்படவில்லை.
இவ்வாறிருக்க, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டு வரும் செயற்றிட்டத்திற்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சத்தியலிங்கம் கடுமையான எதிர்ப்பை அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் வைத்து வெளியிட்டிருந்தார்.
எனினும், தமிழரசுக் கட்சி, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை அபிவிருத்தி செய்ய எந்தவொரு முயற்சியையும் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அதன்போது பதிலளித்திருந்தார்.
இதன்போது, மனித உயிரை முக்கியமாகக் கருதி வசதிகள் குறைந்த மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டு வர வேண்டும் எனக் கூட்டத்தில் கலந்துகொண்ட தாய் கோரிக்கை விடுத்திருந்தார்.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



