சமூக ஊடக பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
இணையம் ஊடாக சமூக ஊடகங்களை பயன்படுத்தி செய்யப்படும் நிதி முறைகேடுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிக்கையொன்றினை வெளியிட்டு எச்சரித்துள்ளது. இதன்படி, அறிக்கையில்,
“இணையத்தில் நடக்கும் மோசடி நடவடிக்கைகள், குறிப்பாக டெலிகிராம் / வாட்ஸ்அப் கணக்குகள் மற்றும் பிற சமூக ஊடகங்கள் மூலம் செய்யப்படும் நிதி மோசடிகள் குறித்து தினமும் முறைப்பாடுகள்பதிவாகி வருகின்றன.
ஆன்லைன் வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக்கூறி, கணக்கு எண்கள், கடவுச்சொற்கள், (பயனர் பெயர் / கடவுச்சொல்) QR குறியீடுகள் போன்ற இரகசியத் தகவல்களைப் பெற்று, பல்வேறு கணக்குகளுக்கு பணம் வரவு வைப்பது போன்ற மோசடிகளைச் செய்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, இணையத்தைப் பயன்படுத்தும் போது இதுபோன்ற மோசடிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
* சமூக ஊடகங்களான (டெலிகிராம் / வாட்ஸ்அப் அல்லது பிற) கணக்குகளில் தெரியாத நபர்கள் மற்றும் தெரியாத சமூக ஊடகக்குழுக்களுக்கு தனிப்பட்ட ஆதாரங்களை வழங்கி மேற்கொள்ளப்படும் மோசடி செயல்களுக்கு ஆளாகாதீர்கள்.
* தெரியாத நபர்கள் மற்றும் குழுக்களால் பகிரப்படும் இணைப்புகள் மற்றும் ஸ்கேன் குறியீடுகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
* சைபர் இடத்தில் தெரியாத நபர்களின் கணக்குகளுக்கு பணத்தை வரவு வைப்பதையும், அவர்களுடன் வங்கித் தகவல்களைப் பகிர்வதையும், மற்றவர்கள் உங்கள் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்த அனுமதிப்பதையும் தவிர்க்கவும்.
* கணக்கு எண்கள், கடவுச்சொற்கள் அல்லது OTP குறியீடுகளை ஒருபோதும் பகிர வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
