லண்டன் வாழ் தமிழ் மக்களுக்கு எச்சரிக்கை - பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
பிரித்தானியாவின் லண்டனில் வசிக்கும் தமிழர்கள் உட்பட தெற்காசிய நாட்டவர்கள் தங்களது வீடுகளின் பாதுகாப்பு குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை மற்றும் இந்திய மக்கள் அடங்கலாக தெற்காசிய நாட்டவர்கள் அதிகளவான தங்கத்தை தம்வசம் வீடுகளில் வைத்துள்ளனர்.
திருட்டு சம்பவங்களில் பல தமிழ் குடும்பங்கள் தாலிக்கொடி உட்பட பெறுமதியான தங்கம் மற்றும் பணத்தை இழந்துள்ளனர்.
திருட்டு சம்பவங்கள்
இவ்வாறான நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் லண்டனின் ஈலிங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
வீடுகளை நோட்டமிடும் கொள்ளையர்கள், அங்கு யாரும் இல்லாத சமயங்களில் உள்நுழைந்து கைவரிசையை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான வழிமுறை
பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது மட்டுமன்றி, வீட்டிற்குள் இருக்கும் போதும் கதவுகள் மற்றும் ஜன்னல்களை எப்போதும் பூட்டி வைத்திருப்பதை உறுதிப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

திருட்டுச் சம்பவங்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் முக்கியமான வழிமுறைகளைப் பின்பற்றுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 22 மணி நேரம் முன்
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri