ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் ஹோட்டலை சுற்றிவளைத்த பொலிஸார்: நடந்தது என்ன...!
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் ஹோட்டலை பொலிஸார் சுற்றிவளைத்து சோதனையிட்டுள்ளனர்.
குறித்த ஹோட்டலில் சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு இது தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது.
நட்சத்திர ஹோட்டல்
அதற்கமைய, வலான மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப்படையின் பணிப்பாளர் ரொஹான் ஒலுகல உள்ளிட்ட குழுவினரால் இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 02, லில்லி வீதியில் அமைந்துள்ள City Hotel எனப்படும் நட்சத்திர ஹோட்டல் ஒன்றே இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் குறித்த ஹோட்டலை சோதனை செய்த போது எவ்வித சட்டவிரோத பொருட்கள் அல்லது நடவடிக்கைகளும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சோதனை நடத்தப்பட்ட போது 6 சட்டத்தரணிகள் கொண்ட குழுவொன்றும் அங்கு இருந்ததாக தெரியவந்துள்ளது.
அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோட்டை நீதவான் நீதிமன்றத்திடம் பெறப்பட்ட அனுமதியின் பேரில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
YOU MAY LIKE THIS VIDEO
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri