பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சந்தேக நபர் ஒருவரின் விபரீத செயல்!
பருத்தித்துறை பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் , தடுத்து வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் பொலிஸாரினால் காப்பாற்றப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் நேற்று (5) இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த சந்தேக நபர் தனது மனைவியை தாக்கியதாக அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அதன் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் தடுத்து வைத்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த நபர் தடுப்புக்காவலில் தனது சாரத்தினை கழட்டி அதன் மூலம் தூக்குப்போட்டு தனது உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.
அதனை கண்ணுற்ற பொலிஸார் அவரை காப்பாற்றி மந்திகை வைத்தியசாலையில்
சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக அவர்
யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan