கல்கிஸ்ஸை நீதிமன்ற தாக்குதல் சம்பவம்! சட்டத்தரணிக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை
கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவரினால் தாக்குதலுக்கு உள்ளானதாக முறைப்பாடு செய்த சட்டத்தரணிக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கல்கிஸ்ஸை நீதிமன்றத்தில் இருந்து தனது காரில் சட்டத்தரணியொருவர் வெளியேற முற்பட்ட நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னை இடைமறித்து கடும் வார்த்தைப் பிரயோகங்களை வெளியிட்டதுடன், தன்மீது தாக்குதல் மேற்கொண்டதாகவும் சட்டத்தரணியொருவர் முறைப்பாடு செய்திருந்தார்.
அதனடிப்படையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காணொளி ஆதாரங்கள்
இந்நிலையில், குறித்த சட்டத்தரணியே மேற்படி சம்பவத்துக்கு முழுக்காரணம் என்றும் அவர் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக கடும் வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டு ஆத்திரமூட்டும் செயற்பாடுகளை மேற்கொண்டதற்கான காணொளி ஆதாரங்கள் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் கல்கிஸ்ஸைப் பொலிஸார் தற்போது தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்த சிலரும் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் குறித்த காணொளியை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சம்பவத்துடன் தொடர்புடைய சட்டத்தரணிக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்த இலங்கை கிரிக்கெட் வீரரே என் குழந்தைக்கு தந்தை - நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெண் News Lankasri
சக்தி கிடைக்காத துயரத்தில் ஜனனிக்கு ஏற்பட்ட சோகம், அறிவுக்கரசியின் ஆட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam