வெள்ளைக்கொடி விவகாரம்! கோட்டாபயவிடம் இருந்து சவேந்திர சில்வாவுக்கு வந்த இறுதித் தருண அழைப்பு
ஈழப்போரின் இறுதித் தருணத்தில் வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சவேந்திர சில்வா ஆகியோருக்கு இடையிலான உரையாடலை காணொளி பதிவு செய்த ஊடகவியலாளர் கொலை செய்யப்படும் நோக்கத்துடன் தேடப்பட்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த ஊடகவியலாளர் தற்போது நாட்டை விட்டு தப்பியோடி அமெரிக்காவில் வாழ்வதாகவும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.
இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சவேந்திரவுக்கு வந்த தொலைபேசி அழைப்பு
2009 ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி காலை ஊடகவியலாளர்கள் கூடியிருந்த நிலையில் சவேந்திர சில்வாவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச பேசியுள்ளார்.
இதன்போது, “வௌ்ளைக் கொட்டியுடன் சரணடைய நாள் முழுவதும் தமிழ் மக்கள் வருவதாகவும் மூன்றாம் தரப்பிடம் சரணடைவது சாத்தியமில்லை. எங்களிடம் தான் சரணடைய வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்” என்று சவேந்திர சில்வா ஊடகவியலாளர்கள் இருப்பது அறியாது கூறினார்.
அப்போது அதை ஒரு ஊடகவியலாளர் காணொளியில் பதிவு செய்துள்ளார். அந்த ஊடகவியலாளரை கொல்வதற்கு இவர்கள் தேடித்திரிந்தனர். இதனையடுத்து அந்த ஊடகவியலாளர் அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றார்.
கொலை செய்ய தேடப்பட்ட ஊடகவியலாளர்
இப்போது அவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். குறித்த காணொளி என்னிடம் இருக்கிறது. 2019 மே 17ஆம் திகதி இரவு 9.30 மணிக்குதான் நான் சீனாவில் இருந்து இலங்கைக்கு வந்தேன். இறுதி போர் 17ஆம் திகதி அதிகாலை 2.30 மணிக்கு தான் ஆரம்பிக்கப்பட்டது.
ஆனால் 17ஆம் திகதி காலை முதல் கோட்டாபய மற்றும் பசில் ராஜபக்ச, எரிக்சொல்ஹெயிம், ஐ.சி.ஆர்.சி, அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியோருடன் நீண்ட காலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, வௌ்ளைக் கொடியுடன் சரணடைய வருபவர்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஆனால் எனக்கு அது தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இவ்வாறான உண்மை கதைகள் பின்னரே தெரியவந்தது என குறிப்பிட்டுள்ளார்.





ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam
