இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு சென்ற 1000 கிலோ சுக்கு பறிமுதல்
வேதாளை கடற்கரை பகுதியில் பொலிஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சுமார் ஒரு வாகனத்தை வழிமறித்ததில் 1000 கிலோ சுக்கு கடத்துவது தெரியவந்துள்ளது.
இலங்கைக்கு மிக அருகாமையில் ராமேஸ்வரம் இருந்து வருவதனால் நாள்தோறும் பல்வேறு வகையான கடத்தல் பொருட்களை கடத்தல் காரர்கள் சர்வ சாதாரணமாக கடத்தலில் ஈடுபட்டு வருவதனால் கடற்கரை பகுதிகளில் பொலிஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுக்கு பறிமுதல்
இந்த நிலையில் மண்டபம் மரைன் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் நேற்றையதினம்(10) வேதாளை கடற்கரை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர்.
இதன்போது அப்பகுதியில் சரக்கு ஏற்றி வந்த வாகனத்தை வழிமறித்துசோதனையிட முற்பட்ட போது வாகனத்தில் இருந்த ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடி சென்றுள்ளார்.
இதை அடுத்து பொலிஸார் வாகனத்தை சோதனையிட்டபோது சுமார் 1000 கிலோ சுக்கு இருந்தது.
மேலும் இதனை இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் ஏற்றி வந்தது தெரிய வந்ததை அடுத்து வாகனத்தையும் சுக்குமூட்டையும் காவல் நிலையத்தில் கொண்டு வந்து பொலிசார் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.




