ஜனாதிபதி அநுரவின் தாயார் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தாயாரின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் தாயார் வசித்த வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.எஸ் குமாரசிறி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல்
இந்த வீடு தற்பொழுது மூடப்பட்டுள்ள போதிலும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை நீக்குதல், காலி முகத்திடலில் வாகனங்களை காட்சிப்படுத்தல் ஆகியன அரசியல் கண்காட்சி நடவடிக்கை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமக்கு அரசியல் ரீதியாக எவரிடமிருந்தும் அச்சுறுத்தல்கள் இல்லாத போதிலும் அநேகமான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல்கள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது அரசாங்கத்தின் கடமை எனவும், ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
