கொழும்பில் வீடொன்றில் திடீர் சோதனை! பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய பெண் உள்ளிட்ட மூவர்
கொழும்பு , ஹங்வெல்ல, பன்சல வீதி பகுதியில் சோதனைக்கு சென்ற பொலிஸ் அதிகாரிகளை தடுத்தமை மற்றும் இரண்டு பொலிஸ் அதிகாரிகளை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹங்வெல்ல, பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று, சட்டவிரோத மதுபானக் கும்பலை சோதனை செய்வதற்காக குறிப்பிட்ட வீட்டிற்கு சென்றுள்ளது.
அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு
இதன்போது அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்து இரண்டு பொலிஸ் அதிகாரிகளை தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

இதன்போது அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தல், அரசாங்க அதிகாரியின் உத்தரவுகளை மீறுதல் மற்றும் கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக் காயப்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர், பொலிஸ் அதிகாரிகளால் தான் தாக்கப்பட்டதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் விசாரணைகள்
அதன்படி, தனக்கும் சிகிச்சை தேவை என்று கூறியுள்ளதால், சந்தேகநபர் தற்போது ஹோமாகம வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த நிலையில், அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 5 நாட்கள் முன்
என்னை தேடாதீர்கள் என அம்மாவிடம் கூறிவிட்டு கேரளா சென்ற ஜேசன் சஞ்சய் - 100 மீட்டரில் சிறுத்தை! Manithan