யாழில் இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரியின் மகன்
யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரியின் மகன் 20 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்றதாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
வட்டுக்கோட்டை - மூளாய் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று முன்தினம் (03.03.2025) மதுபானம் பாவித்து விட்டு முரண்பாட்டில் ஈடுபட்டவேளை, யாழ்ப்பாணம் நகர் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைமறைவு
இந்நிலையில், அந்த வழக்கினை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லாமல் தடுப்பதாக கூறி யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியின் மகன் 20 ஆயிரம் ரூபா இலஞ்சமாக பெற்றுள்ளார்.
இருப்பினும், அந்த வழக்கானது நீதிமன்றுக்கு கொண்டுசென்ற நிலையில் அவருக்கான தண்டமாக 25 ஆயிரம் ரூபா அறவிடப்பட்டது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபர் இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இலஞ்சம் பெற்ற குறித்த நபர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |