ட்ரம்ப் - ஜெலென்ஸ்கியின் இராஜதந்திர மோதல்: அமெரிக்காவின் அதிரடி தீர்மானம்
அமெரிக்காவிலிருந்து உக்ரைனுக்கு (Ukraine) வழங்கப்படும் உளவுத்தகவல் முழுமையாக நிறுத்தப்பட்டு இருப்பதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமரிக்க வெள்ளை மாளிகையில், ட்ம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையில், இடம்பெற்ற முரண்பாட்டிற்கு பின்னர் பல்வேறு நடவடிக்கைகளை இரு நாடுகளும் முன்னெடுத்து வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்க - உக்ரைனுக்கு இடையிலான உளவுத் தகவல் பகிர்வு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உளவுத் தகவல்
இதன் காரணமாக, உக்ரைனுக்கு அமெரிக்காவின் ஆதரவில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், இந்நிலைமையை அறிந்த உக்ரேனிய வட்டாரத்தின் தகவலின் அடிப்படையில், அமெரிக்கா இப்போது கீவ் உடன் அனைத்து உளவுத் தகவல்களையும் பரிமாற்றிக் கொள்வதை நிறுத்தி விட்டது.
ரஷ்யாவிற்குள் தாக்குதல்களை எளிதாக்கும் தகவல்களை குறிப்பாக குறிவைத்து, "தேர்ந்தெடுக்கப்பட்ட" நிறுத்தம் என்று அந்த வட்டாரம் விவரித்த முந்தைய அறிக்கைகளுக்கு இது முரணாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராஜதந்திர மோதல்
அதேவேளை, இந்த முழுமையான தகவல் நிறுத்தத்திற்கு முன்னர், ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள ரஷ்ய படைகளுக்கு எதிரான உக்ரேனிய நடவடிக்கைகளுக்கு பொருத்தமான உளவுத் தகவல்களை அமெரிக்கா தொடர்ந்து வழங்கியுள்ளது.
அத்துடன், உக்ரேனிய அதிபர் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்ட இராஜதந்திர மோதலைத் தொடர்ந்து, உக்ரைனுக்கு இராணுவ உதவி நிறுத்தப்பட்ட முந்தைய முடிவைத் தொடர்ந்து இந்த முழுமையான இடைநீக்கம் வந்துள்ளது.
எனவே, அமெரிக்கா எடுத்துள்ள இந்த நடவடிக்கை உக்ரைனுக்கு ஒரு பெரிய பின்னடைவாகவே உள்ளது எனலாம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
