கடற்தொழில் அமைச்சரை கடுமையாக சாடிய கஜேந்திரகுமார் எம்.பி
கடந்த கால அரசாங்கத்தை போலே நீங்களும் இலங்கை கடற்றொழிலாளர்களை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கு கஜேந்திரகுமார் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் இன்று (5) உரையாற்றும் போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு, கிழக்கை பொறுத்த வரையில் கடற்றொழில் என்பது பொருளாதாரத்தின் மையம்.அதனை திட்டமிட்டு அழிப்பதற்கு முன்னைய அரசாங்கம் செயற்பட்டது என்ற குற்றச்சாட்டை பகிரங்கமாக முன்வைக்கின்றோம்.
நஷ்ட ஈடு
தேசியமக்கள் சக்தி அரசாங்கம் இனவாத கோணத்திலே செயற்படாத ஒரு அரசாங்கம் என்று சொல்லுகின்றீர்கள்.
வடக்கை பொறுத்த வரையில் ஒவ்வொரு நாளும் கடற்றொழிலாளர்களின் சொத்துக்களை அழிக்கின்ற வகையிலே சட்டவிரோத செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.
எனவே, தற்போதைய கடற்றொழில் அமைச்சர் அதனைக் கருத்திற் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்க வேண்டும் என கோரிக்கையை முன்வைக்கின்றேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
