இறுதிப்போட்டியில் இந்திய அணியை களம் காணும் நியூசிலாந்து
ஐ.சி.சி செம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டியில் இந்திய அணியை நியூசிலாந்து அணி எதிர்த்தாடவுள்ளது.
இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென்னாபிரிக்க அணியை வெற்றி கொண்டதன் மூலம் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை அந்த அணி தக்கவைத்துக்கொண்டுள்ளது.
குறித்த தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 50 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
நியூசிலாந்து அணி
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி அந்த அணி 50 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 362 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பில் ரச்சின் ரவிந்திரா அதிகபட்சமாக 108 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 102 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் நிகிடி 03 விக்கெட்டுக்களையும், ரபாடா 02 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
டேவிட் மில்லர்
இதற்கமைய 363 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 312 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.
துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் இறுதி வரை போராடிய டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 100 ஓட்டங்களையும் ராஸ்ஸி வான் டெர் டஸ்ஸன்(Rassie van der Dussen) 69 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் சான்டர் 03 விக்கெட்டுக்களையும், மார்ட் ஹரி மற்றும் பிலிப்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


பிரித்தானியாவில் ஆங்கிலம் பேசத் தெரியாமல் 1 மில்லியன் மக்கள்: பிரதமர் விடுத்த கோரிக்கை News Lankasri

சிறுவயதில் முத்துவிற்கும், விஜயாவிற்கும் என்ன பிரச்சனை ஆனது?.. சிறகடிக்க ஆசை நடிகை அனிலா ஓபன் டாக் Cineulagam
