ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை..! ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு
அனைத்து பணயக்கைதிகளையும் இப்போதே விடுவிக்காவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹமாஸ் அமைப்புக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பினருடன் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு இருப்பதாக சர்வதேச ரீதியில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதற்கிடையில், ட்ரம்ப், தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் ஹமாஸ் அமைப்புக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்படுவதாக பதிவு ஒன்றினை இட்டுள்ளார்.
பணயக்கைதிகள்
குறித்த பதிவில், " 'ஷாலோம் ஹமாஸ் - Shalom Hamas' என்றால் வணக்கம் அல்லது விடைபெறுதல் என்று அர்த்தம், எனவே நீங்களே எது வேண்டும் என தெரிவு செய்யுங்கள்.
பணயக்கைதிகள் அனைவரையும் இப்போதே விடுவித்து விடுங்கள், பின்னர் அல்ல, நீங்கள் கொலை செய்த மக்களின் அனைத்து இறந்த உடல்களையும் உடனடியாகத் திருப்பி அனுப்புங்கள்.
இஸ்ரேலுக்குத் தேவையான அனைத்தையும் நான் அனுப்பிக் கொண்டிருக்கின்றேன். எனவே, நான் சொல்வது போல் நீங்கள் செய்யாவிட்டால் ஒரு ஹமாஸ் உறுப்பினரும் பாதுகாப்பாக இருக்க மாட்டார்.
( @realDonaldTrump - Truth Social Post )
— Donald J. Trump 🇺🇸 TRUTH POSTS (@TruthTrumpPosts) March 5, 2025
( Donald J. Trump - Mar 05, 2025, 4:46 PM ET )
“Shalom Hamas” means Hello and Goodbye - You can choose. Release all of the Hostages now, not later, and immediately return all of the dead bodies of the people you murdered, or it is OVER… pic.twitter.com/cL5GIBUHD5
காசா மக்கள்
நீங்கள் வாழ்க்கையை அழித்த உங்கள் முன்னாள் பணயக்கைதிகளை நான் இப்போது சந்தித்தேன். இதுவே உங்களுக்கான கடைசி எச்சரிக்கை. உங்கள் தலைமை, இப்போது காசாவை விட்டு வெளியேற வேண்டிய நேரம் இது, உங்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, காசா மக்களுக்கு ஒரு அழகான எதிர்காலம் காத்திருக்கிறது, ஆனால் நீங்கள் பணயக்கைதிகளை வைத்திருந்தால் அது நடக்காது.
ஆகையால், பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே, ஒரு புத்திசாலித்தனமான முடிவை எடுங்கள். பணயக்கைதிகளை இப்போதே விடுவிக்கவும், இல்லையெனில் பின்னர் விளைவுகள் மிக பயங்கரமாக இருக்கும்” என கடுமையாக எச்சரித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |