உக்ரைன் மீதான முக்கிய நகர்வுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள ஐரோப்பிய நாடு
உக்ரைனுக்கு (Ukraine) இராணுவ வீரர்களை அனுப்புவதற்காக பிரித்தானியா (UK) மற்றும் பிரான்ஸ் (France) முன்வைத்துள்ள திட்டத்திற்கு இத்தாலி மறுப்பு தெரிவித்துள்ளது.
ரஷ்ய - உக்ரைன் போரில், உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகளின் இராணுவ வீரர்களை உக்ரைனுக்கு அனுப்புவது தொடர்பில் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் இணைந்து திட்டம் ஒன்றினை முன்வைத்துள்ளன.
இருப்பினும், இத்தாலியின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி, தம் நாட்டு இராணுவ வீரர்களை உக்ரைனுக்கு அனுப்ப முடியாது என்று தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய - பிரான்ஸ் திட்டம்
அத்துடன், குறித்த திட்டம் தொடர்பில் இத்தாலிக்கு சந்தேகங்கள் இருப்பதாக கூறியுள்ள மெலோனி, அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினம் என கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் என்றும் ரஷ்ய - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்னும் நோக்கில் தான் உள்ளன.
இருந்த போதிலும், உக்ரைனுக்கு ஆதரவாக முன்வைத்துள்ள திட்டம் அந்த விடயத்தில் எத்தகைய பலனைத் தரும் என்பது குறித்து தனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்று கூறியுள்ள இத்தாலியின் பிரதமர், இத்தாலி நாட்டு இராணுவ வீரர்களை உக்ரைனுக்கு அனுப்ப முடியாது என்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறுவயதில் முத்துவிற்கும், விஜயாவிற்கும் என்ன பிரச்சனை ஆனது?.. சிறகடிக்க ஆசை நடிகை அனிலா ஓபன் டாக் Cineulagam

400 நாட்கள் கொண்ட PNB FD திட்டத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
