மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலில் சிங்கள பின்னணி:சர்ச்சையை கிளப்பும் தேரர்
தென் பகுதியில் இருந்து சிங்களவர்கள் இந்தியாவின் புத்தகயாவுக்கு செல்லும் போது மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் நிலத்தில் தங்கி செல்வதோடு மீண்டும் இந்தியாவில் இருந்து வரும் போதும் அங்கே தங்கியிருந்து வருதாக கொட்டபிட்டிய ராகுல தேரர் (Kotapitiye Rahula Thero) தெரிவித்துள்ளார்.
'ஜன்மபூமி' என்ற நிகழ்வில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.தொடர்ந்துரையாற்றிய அவர்,
மாவிட்டபுரம் கோவில் - சிங்கள பௌத்தம்
இதை ஜனாதிபதிக்கு தெரியப்படுத்த வேண்டும்.நன் உட்பட தேரர்கள் பலர் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த போது நாங்கள் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலை பார்க்க சென்றோம்.
அப்போது அந்த கோவிலின் பூசகர் மிக அதிசயமான கதை ஒன்றை சொன்னார். தென்னிலங்கை சிங்கள பௌத்தர்கள் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து புத்தகயாவுக்கு செல்லும் போது மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் இளைப்பாறி விட்டு செல்வதோடு மீண்டும் வரும் போதும் இளைபாறிவிட்டே தென்னிலங்கைக்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வு பௌத்த மதம் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் நடந்ததாகவும் அந்த பூசகர் தெரிவித்திருந்ததாக குறிப்பிட்ட ராகு தேரர்.எமது சிங்கள வரலாறு 2500 வருடங்கள் பழமையானது.

இவ்வாறான விடயங்கள் வெளியில் வருவதில்லை.அதனால் வடக்கில் எமக்கு சிங்கள பௌத்த உரிமைகள் இருக்கிறது.அதே போல தமிழர் உரிமைகளும் வடக்கில் இருக்கிறது.
அனைத்து மக்கள் கூட்டத்தினருக்கும் ஏதோ ஒரு உரிமை இருக்கிறது.அது தொடர்பில் எமக்கு எவ்வித வாதங்களும் இல்லை.
ஆனால் தென்னிலங்கையில் இருந்து வடக்குக்கு செல்ல முடியுமா? அல்லது செல்வது தவறானதா? என்ற விவாதம் உருவாக்கப்பட்டு இனவாதத்தை உருவாக்க முயற்சிக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam